காஸாவுக்கு $26,500 நன்கொடை திரட்டியது அமானத் கூட்டுறவுச் சங்கம்

காஸாவுக்கு $26,500 நன்கொடை திரட்டியது அமானத் கூட்டுறவுச் சங்கம்

1 mins read
6135a237-b2d7-4b99-a123-c7de2921277e
யூசோஃப் இஷாக் பள்ளிவாசலில் நடந்த நிகழ்ச்சியில் $26,500 காசோலையை அமானத் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பஷீர் சலாஹுத்தீன், ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவன நிர்வாகி நோர்லிண்டா ஓஸ்மானிடம் அளித்தார். - படம்: அமானத் கூட்டுறவுச் சங்கம்
Google News Preferred Icon

ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவனம், காஸா மக்களின் நிவாரணத்திற்காக கடந்த மாதம் நன்கொடை திரட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அதில் அமானத் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் பங்கெடுத்தது.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் இச்சங்கம், தன் உறுப்பினர்களிடமிருந்து $26,500 நிதி திரட்டியது.

யூசோஃப் இஷாக் பள்ளிவாசலில் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) நடந்த நிகழ்ச்சியில் இத்தொகைக்கான காசோலையை அமானத் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பஷீர் சலாஹுத்தீன், ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவன நிர்வாகி நோர்லிண்டா ஓஸ்மானிடம் அளித்தார்.

அமானத் நிர்வாகத்திற்கு நன்றி கூறிய அவர், திரட்டப்பட்ட தொகையைக் கொண்டு உணவுப் பொருள்கள், நீர், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வாங்கப்படும் என்றார்.

யூனிசெஃப், எகிப்திய செம்பிறைச் சங்கம், ‘ஹியூமேனிட்டி மேட்டர்ஸ்’ போன்ற அனைத்துலக அறநிறுவனங்களின் உதவியோடு காஸாவுக்கு அவை அனுப்பிவைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நிதி திரட்டுவதற்கான ஏற்பாடுகளை அமானத் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் ஜாஃபர் ஏஜாஸ் செய்திருந்தார். நிகழ்வில் சங்கத்தின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் சுலைமான் காலித், முஹம்மது ஃபைசல் இருவரும் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்
காஸாநன்கொடைஉதவித்தொகை