இந்தியில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் பத்து நாள்களில் ரூ.550 கோடி வசூல் கண்டுள்ளது.
அக்ஷய் கன்னா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஆதித் தாகர் இயக்கியுள்ளார்.
திகிலும் உளவுக்காட்சிகளும் நிறைந்த படமாக உருவாகியுள்ள ‘துரந்தர்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள அதே வேளையில், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாகத்தையும் முன்கூட்டியே தயார் செய்துவிட்டது தெரியவந்துள்ளது. பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “’துரந்தர்’ போல் ஒரு படத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல,” என்று தெரிவித்துள்ளார்.
“இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தைப் பார்ப்பதற்காக நாம் மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏன் எங்களுடைய உணர்வுகளுடன் விளையாடுகிறீர்கள். இரண்டாம் பாகத்தை முன்கூட்டியே வெளியிடப்போவதாக அறிவியுங்கள்,” என்று ஷ்ரத்தா கபூர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ‘துரந்தர் -2’ விரைவில் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்டது. இதனால் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

