விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது

1 mins read
0e483dc0-0933-42be-b513-496b3e73a1e0
‘சிக்மா’ படக் கதாநாயகன் சந்தீப் கிஷன். - படம்: சமயம்
Google News Preferred Icon

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வளர்ந்ததுமே அவரைத் தேடி ஹீரோ வாய்ப்புகள் வந்து குவிந்தன. ஆனால் அவருக்கு நடிப்பை விட இயக்கம் மீது தான் ஆர்வமாக இருந்தது. இதையடுத்து படம் இயக்குவது, திரைக்கதை எழுதுவது குறித்து வெளிநாடுகளில் படித்துவிட்டு நாடு திரும்பினார்.

ஜேசன் சஞ்சயின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர் இயக்கும் முதல் படத்தைத் தயாரிக்க முன்வந்தது லைகா நிறுவனம். வித்தியாசமான கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் சந்தீப் கிஷனை தன் படக் கதாநாயகனாகத் தேர்வு செய்தார். படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்தார். சிக்மா என பெயர் வைக்கப்பட்ட அந்தப் படத்தின் முன்னேட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களின் ஆவலைத் தூண்டியது.

இந்நிலையில் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் சிக்மா படத்தைப் பார்த்து மகிழலாம் என்று வெள்ளிக்கிழமை (மே 29) அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

வெளியீடு குறித்த லைகாவின் பதிவை பார்த்தவர்கள் சிக்மா பெரும் வெற்றி பெற வாழ்த்துகள் என்றும் பாடல்கள் எப்பொழுது வெளியிடப்படும், முன்னோட்டக் காட்சி எங்கே, இசை வெளியீட்டு விழாவை எங்கு நடத்தப் போகிறீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

ஜேசன் சஞ்சய் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். சிக்மா வருமா, வராதா என்று பேசப்பட்ட நிலையில் ஒரு வழியாக வெளியீடு தேதியை அறிவித்துவிட்டார்கள்.

இதற்கிடையே ஜூன் 19ஆம் தேதி ஜனநாயகன் வெளியாகும் என்ற பேச்சு கிளம்பி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாவிஜய்