விஜய் படத்தின் வெளிநாட்டு உரிமத்தை அதிக விலை கொடுத்து வாங்கியது ‘பார்ஸ் பிலிம்ஸ்’

விஜய் படத்தின் வெளிநாட்டு உரிமத்தை அதிக விலை கொடுத்து வாங்கியது ‘பார்ஸ் பிலிம்ஸ்’

1 mins read
84320383-86eb-4a95-8e7a-2ea8dbd737d7
நடிகர் விஜய். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

விஜய் நடித்து வரும் அவரது இறுதிப் படமான ‘விஜய் 69’ படத்தின் வெளிநாட்டு உரிமத்தை ‘தி கோட்’ படத்தின் வெளிநாட்டு உரிமத்தை வாங்கிய அதே நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது.

வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள அவரது 69வது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

அரசியலில் தீவிரமாக இறங்குவதற்கு முன்பாக விஜய்யின் கடைசிப் படமாக இப்படம் அமைய உள்ளது. அதனால், படத்தின்மீது நிறையவே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அரசியல் கதையாக, அரசியல் பஞ்ச் வசனங்கள் உள்ள படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, படத்திற்கான வியாபாரமும் இப்போதே மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமத்தைப் ‘பார்ஸ் பிலிம்ஸ்’ என்ற நிறுவனம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஏறக்குறைய ரூ.75 கோடி கொடுத்து அந்த உரிமையைப் பெற்றுள்ளார்களாம்.

இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தி கோட்’ படத்தின் வெளிநாட்டு உரிமையையும் இதே நிறுவனம்தான் வாங்கியிருந்தது.

அதன் விலை சுமார் ரூ.70 கோடி வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது கூடுதல் தொகையுடன்தான் ‘விஜய் 69’ படத்தின் உரிமையை வாங்கியுள்ளார்கள்.

குறிப்புச் சொற்கள்
சினிமாதிரைச்செய்திவிஜய்