அனைத்து அம்சங்களும் கொண்ட படமாக உருவாகிறது ‘வெக்கை’

அனைத்து அம்சங்களும் கொண்ட படமாக உருவாகிறது ‘வெக்கை’

1 mins read
98bb71ae-82fc-4e2b-9173-f721e52b2f2f
 ஜிவி பிரகாஷ். - கோப்புப் படம்: இந்தியா டுடே
Google News Preferred Icon

அறிமுக இயக்குநர் அகிரன் மோசஸ் இயக்கத்தில் உருவாகும் ‘வெக்கை’ படத்தில் நாயகனாக நடிக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.

இது திகில், காதல், பாசம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கொண்ட படைப்பாக உருவாகி வருகிறது என இயக்குநர் தரப்பில் கூறப்படுகிறது.

ஜி.வி. பிரகாஷின் தோற்றமும் நடிப்பும் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவரைத் தன் படத்தில் நடிக்கவைக்க வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் சொல்கிறார் அகிரன் மோசஸ்.

நம் எல்லாருக்குமே வாழ்க்கையைப் பற்றி ஒரு நம்பிக்கை இருக்கும். அதை ஜி.வி. பிரகாஷ் அழகாக வெளிப்படுத்தினார்.

“உண்மையைச் சொல்லும்போது அதன் விளிம்புவரை எட்டிப்பார்க்கும் முனைப்பு எனக்கு எப்போதும் உண்டு. ஜி.வி. பிரகாஷ் அதைப் புரிந்துகொண்டு நடித்தார்.

“ஜி.வி.க்கு ஜோடியாக நடிகரும் மருத்துவருமான ராஜசேகரின் மகள் ஷிவானி நடிக்கிறார். இந்த ஜோடி தமிழ் ரசிகர்களை நிச்சயம் கவரும். இக்கதையின் இணை பேசப்படும்.

“இக்கதையின் ஒவ்வோர் இடத்தையும் ஜி.வி. பிரகாஷ் நன்கு உணர்ந்திருந்ததால் அவரே இசையமைப்பது சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது. அதை ஏற்றுக்கொண்டு அவர் இரண்டு பாடல்களையும் பின்னணி இசையையும் அமைத்துத் தந்தார். அறிவு இரண்டு பாடல்களை எழுதி, அவற்றுக்கு இசையமைத்துள்ளார்.

“ஒரு நல்ல படைப்பைத் திரையில் கண்ட அனுபவமும் மனநிறைவும் ரசிகர்களுக்குக் கிடைப்பது உறுதி,” என்கிறார் இயக்குநர் அகிரன் மோசஸ்.

குறிப்புச் சொற்கள்