‘வாரணாசி’ படம் புராணமும் தெய்வீகமும் கலந்த படைப்பாக உருவாகி வருகிறது என்கிறார் இயக்குநர் ராஜமௌலி.
2027ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மைய பேட்டியில் ‘வாரணாசி’ படம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார் ராஜமௌலி.
இப்படத்தில் ஏறக்குறைய 25 நிமிடங்களுக்குப் புராணப் பகுதிகள் இடம்பெறுமாம்.
புராண காலத்து கருத்துகளும் தெய்வீக அம்சங்களும் கலந்த கலவையாக இப்படம் இருக்கும் என்றும் முதல் பார்வை போன்றே முழுப்படைப்பும் ரசிகர்களை ஈர்க்கும் என்றும் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் மகேஷ் பாபு ருத்ரா என்ற கதாபாத்திரத்திலும் நாயகியாக நடிக்கும் பிரியங்கா சோப்ரா மந்தாகினியாகவும் பிருத்விராஜ் சுகுமாரன் கும்பா என்ற வில்லன் வேடத்திலும் நடிக்கும் தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.
இதனிடையே, ‘வாரணாசி’ படத்தில் தமக்கு ஒரு பாடலுக்கு மட்டுமாவது நடனமாட வாய்ப்பு தரவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளாராம் பிரியங்கா. அவர் படங்களில் நடனமாடி ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.
மகேஷ்பாபுவும்கூட இதேபோன்ற விருப்பத்தை முன்வைக்க, இருவரது கோரிக்கையையும் நிச்சயம் நிறைவேற்றிவிடலாம் என உறுதியளித்துள்ளார் ராஜமௌலி.

