சமூகத்தின் மீதான அக்கறையே ‘TN 2026’ படம்: தம்பி ராமையா

சமூகத்தின் மீதான அக்கறையே ‘TN 2026’ படம்: தம்பி ராமையா

1 mins read
2f02ac8c-173a-479a-ad90-20527c940606
நட்டி (நடராஜ்) நடித்துள்ள ‘TN 2026’ திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளிவர உள்ளது.   - படம்: சினிமா விகடன்
Google News Preferred Icon

தமிழக அரசியலின் தற்போதைய சூழலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘TN 2026’.

தம்பி ராமையாவின் கதையில், அவரது மகன் உமாபதி இயக்கத்தில், நட்டி என்ற நடராஜ் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது.

இது குறித்து ‘சினிமா விகடன்’ குழுவினருக்கு அளித்த நேர்காணலில், படத்தின் கதையாசிரியர் தம்பி ராமையா சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“இன்றைய தலைமுறையினருக்கு 14 - 15 வயதிலேயே அரசியல் முதிர்ச்சி வந்துவிடுகிறது. எம்ஜிஆர் - திமுக தலைவர் கருணாநிதி ஆகிய இரு ஆளுமைகளும் ஒருவருக்கொருவர் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதை இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க விரும்பினேன்.

“வெறும் பணம் சம்பாதிப்பதை விட, சமூகத்திற்கு உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உந்துதலில் இக்கதையை எழுதினேன்.

“இதில் கற்பனையாக எழுதிய சில காட்சிகள் இன்றைய நிஜ அரசியலில் பிரதிபலிப்பது எங்களுக்கே வியப்பாக உள்ளது.

நேர்காணலில் பங்கேற்ற தம்பி ராமையா(நடுவில்).
நேர்காணலில் பங்கேற்ற தம்பி ராமையா(நடுவில்). - படம்: சினிமா விகடன்

விஜய் குறித்து

“தளபதி விஜய் ஒரே இரவில் அரசியலுக்கு வரவில்லை. அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் 100 எம்எல்ஏக்களுக்குச் சமமானவர். இப்படம் பல காலகட்டத்தின் தொகுப்பு என்பதால் முழுமையாகப் பார்க்காமல் எந்த முடிவிற்கும் வர வேண்டாம்,” என அவர் கேட்டுக் கொண்டார்.

கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படம் இளைஞர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்