என்னை நானே மீட்டெடுத்த காலம்: ஷ்ருதி

என்னை நானே மீட்டெடுத்த காலம்: ஷ்ருதி

1 mins read
d9deba11-7fb6-4adf-8f7a-a1ebda6a901c
ஷ்ருதிஹாசன். - படம்: இந்துஸ்தான் டைம்ஸ்
Google News Preferred Icon

பல ஆண்டுகளாக தாம் கடுமையான பதற்றத்தால் (Cripling anxiety) அவதிப்பட்டதாகக் கூறியுள்ளார் நடிகை ஷ்ருதிஹாசன்.

பதற்றம் காரணமாக தன்னுடைய அன்றாட வேலைகளைச் சரியாக செய்ய முடியவில்லை என்றும் அண்மைய நேர்காணல் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான பட வாய்ப்புகளை மறுத்து நடிப்பதிலிருந்து சில காலம் விலகியிருந்தார் ஷ்ருதி. எதற்காக இந்த இடைவெளி என்பது குறித்து அவர் இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

அந்த இடைவெளியில் தன்னைத்தானே மறுமதிப்பீடு செய்து வந்ததாகவும் சில மனநலப் பிரச்சினைகளுக்காக அந்த இடைவெளி தேவைப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் எதைப் பெறுகிறேன், நான் யார் என்பதில் தெளிவு ஏற்படவில்லை‌‌. அந்தச் சமயம் நான் லண்டனில் இருந்தேன். அங்கு இசையின் மூலம் என்னை மீண்டும் கண்டறிந்தேன்,” என்று நேர்காணலில் கூறியுள்ளார் ஷ்ருதி.

மேலும், நாள்தோறும் தனது உடைகளை தாமே துவைப்பது, சமைப்பது, மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது, புதிய இசையை உருவாக்குவது, புதிதாக எழுத பயிற்சி எடுப்பது எனத் தன்னைத்தானே மீட்டெடுத்ததாக ஷ்ருதி கூறியுள்ளார்.

எப்போதும் கலைஞராக இருப்பதையே விரும்புவதாகவும் அதுதான் தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் கூறுகிறார்.

வழக்கமான கதாபாத்திரங்களைத் தவிர்த்து சவாலான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ள ஷ்ருதிஹாசன், தற்போது ‘ஆகாசம்லோ ஒக்க தாரா’ என்ற தெலுங்குப் படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்