எதிர்பார்ப்புகள் உள்ளன: ஷ்ருதி ஹாசன்

எதிர்பார்ப்புகள் உள்ளன: ஷ்ருதி ஹாசன்

1 mins read
4887b0e8-2f29-4cef-a5e3-cfb2c37bcac9
ஷ்ருதி ஹாசன். - படம்: இண்டியா டுடே
Google News Preferred Icon

“நாற்பது வயதைத் தொட்டுவிட்டாலும் நான் இன்னும் பரபரப்பான நடிகையாகத்தான் இருக்கிறேன்,” என்கிறார் ஷ்ருதிஹாசன்.

தமிழ், கன்னடம், மலையாளம் எனத் தற்போது மூன்று மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

20 வயது இளம் நாயகியிடம் எத்தகையை எதிர்பார்ப்புகள் இருக்குமோ, அதேபோன்ற எதிர்பார்ப்புகள் தமக்கும் உள்ளதாகச் சொல்கிறார்.

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ படத்தில் நடித்து முடித்துள்ள ஷ்ருதி, அடுத்து தெலுங்கில் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

“தென்னிந்திய மொழிகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. கன்னடம், மலையாளத்திலும் தலா ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளேன்.

“என்னைப் பொறுத்தவரை இனி எண்ணிக்கை என்பது முக்கியமல்ல. வர்த்தக அம்சங்களுடன்கூடிய நல்ல கதைகளில் நடிக்க வேண்டும். ஒரு நடிகையாக அதுதான் மனநிறைவு தரும் என்று என் அப்பா ஒருமுறை கூறியதை முக்கியமான அறிவுரையாகக் கருதுகிறேன். அதை மறக்கவே மாட்டேன்,” என்கிறார் ஷ்ருதிஹாசன்.

குறிப்புச் சொற்கள்