வார இறுதியில் ரூ.13.65 கோடி வசூலித்த ‘தாய் கிழவி’

வார இறுதியில் ரூ.13.65 கோடி வசூலித்த ‘தாய் கிழவி’

1 mins read
07ab3d32-4e08-47fe-ae6a-e951b04bb067
‘தாய் கிழவி’ திரைப்படம் திரைக்கு வந்த முதல் வார இறுதியில் 13.65 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. - படம்: த இந்து
Google News Preferred Icon

பல வாரங்களாக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்த ‘தாய் கிழவி’ திரைப்படம் திரைக்கு வந்த முதல் வார இறுதியில் 13.65 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) ரூ.2.65 கோடியாகப் பதிவான ‘தாய் கிழவி’யின் வசூல், மறுநாள் சனிக்கிழமை ரூ.5 கோடியைத் தொட்டது.

செக்னிக் இணையத்தளம் வெளியிட்ட தகவல்படி, படம் வெளிவந்த முதல் மூன்று நாள்களில் 6 கோடி ரூபாயை வசூலித்துவிட்டது.

ஞாயிற்றுக்கிழமையன்று ‘தாய் கிழவி’ படத்தைக் காண காலைக் காட்சிக்கு ஏறக்குறைய 30.15 விழுக்காட்டினர் திரையரங்குகளுக்குத் திரண்டனர். பிற்பகலுக்குள் அந்த எண்ணிக்கை மளமளவென அதிகரித்து 59.38 விழுக்காடானது.

மாலைக் காட்சிக்கு 65.50 விழுக்காட்டினரும் இரவுக் காட்சிக்கு 50 விழுக்காட்டினரும் திரையரங்குகளில் திரண்டனர்.

நடிகை ராதிகா சரத்குமார் ‘தாய் கிழவி’ வேடத்தில் மிரளவைக்க, நடிகர்கள் அருள்தாஸ், இளவரசு, ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றனர்.

நகைச்சுவையுடன் சிந்திக்க வைக்கும் குடும்பப் படம் என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்ட கருத்துகள் அதிகமானோரைத் திரையரங்குகள் பக்கம் ஈர்த்தது என்றும் பரவலாகக் கருதப்படுகிறது.

தமிழ்த் திரையுலகில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் ‘தாய் கிழவி’. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் படம் உருவாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்