ரியா ஷிபுவைப் பாராட்டிய சூர்யா தம்பதியர்

ரியா ஷிபுவைப் பாராட்டிய சூர்யா தம்பதியர்

1 mins read
0ea209be-a701-46e6-9a58-a04ce80d303b
ரியா ஷிபு. - படம்: ஃபில்மிபீட்
Google News Preferred Icon

மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான ’சர்வம் மாயா’ படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல்கண்டு சாதனை படைத்துள்ளது.

இதில் நாயகியாக நடித்த ரியா ஷிபுவுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. இதற்கு முன்பு ‘கப்’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரியா. கடந்த 2024ல் இப்படம் வெளியானது.

ரியா ஷிபு வேறுயாருமல்ல. தமிழில் ‘புலி’, ‘இருமுகன்’, ‘வீரதீர சூரன்’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ள சிபு தமினின் மகள்.

இந்நிலையில், இவரை சூர்யா தம்பதியினரும் பாராட்டியுள்ளனர். இருவரும் பாராட்டுக் கடிதத்துடன் நிற்காமல் ஒரு பரிசையும் அனுப்பி வைத்துள்ளனர்.

“’சர்வம் மாயா’ படத்தில் உங்களுடைய நடிப்பை ரசித்தோம். மிக இயல்பாக, தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் நடித்துள்ளீர்கள்.

“மேலும் பல தொடர் வெற்றிகளைப் பெற வாழ்த்துகளும் எங்கள் பாராட்டுகளும்,” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூர்யா ஜோதிகா தம்பதியரின் இந்த வாழ்த்து கடிதத்தையும் பரிசுப் பொருளையும் படம்பிடித்து தனது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார் ரியா ஷிபு.

குறிப்புச் சொற்கள்