சிம்பு படத் தயாரிப்பைக் கைவிட்ட கமல்

சிம்பு படத் தயாரிப்பைக் கைவிட்ட கமல்

1 mins read
0969b759-a1c5-446c-88c2-6a13819a0604
கமல், சிம்பு. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

சிம்புவை வைத்து கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்த புதுப்படம் கைவிடப்பட்டுள்ளது.

தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் சரித்திரப்படம் ஒன்றைத் தயாரிக்க இருந்தார் கமல். இது தொடர்பான அறிவிப்பு சுவரொட்டியும் வெளியானது.

கமல்ஹாசனும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ள படம் என விளம்பரப்படுத்தப் பட்டதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் இந்தப்படத்தை கமல்ஹாசன் கைவிட்டுள்ளார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த படத்திலிருந்தும் கமல் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிம்பு படத்தில் கமல் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிம்பு படத்துக்கு திட்டமிட்டதைவிட அதிக செலவாகும் என்று கூறப்படுவதால் அப்படத்தையும் கைவிட்டுள்ளார் கமல்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்