காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க தாம் தயாராக இருப்பதாகச் சொல்கிறார் நடிகர் ஜீவா.
“கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் எத்தகைய கதாபாத்திரத்திலும் நடிக்க நான் தயார். ஒருவேளை கருணாநிதியாகவே நடிக்க அழைத்தாலும் மறுக்கமாட்டேன்,” என்று கூறியுள்ளார் ஜீவா.
ஏற்கெனவே ஆந்திர முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த அனுபவம் தமக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பது பெருமைக்குரியது என்று கூறியுள்ளார்.
“என்னைப் பொறுத்தவரை காலஞ்சென்ற கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை இணையத் தொடராக எடுப்பதுதான் சரியாக இருக்கும்.
“அவரது சாதனை வாழ்க்கையை இரண்டரை மணிநேர திரைப்படமாக சுருக்கிவிட இயலாது.

