ரஜினியின் 171வது படமான ‘கூலி’யில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் நடிகை அபிராமி.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யராஜ், ஷ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அபிராமி உள்ளிட்ட நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
‘விருமாண்டி’, ‘மிடில்கிளாஸ் மாதவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபிராமி. வரும் 10ஆம் தேதி ‘கூலி’ படத்தின் படப்பிபிடிப்பு தொடங்குகிறது. அதற்கு முன்பே அபிராமி அப்படத்தில் நடிப்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும்.

