வில்லனுக்காகக் காத்திருக்கும் அஜித் படக்குழு

வில்லனுக்காகக் காத்திருக்கும் அஜித் படக்குழு

1 mins read
826a0c77-be0c-4cb9-98d3-0b05db6361f8
அஜித். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சத்தமின்றி நடைபெற்று வருகிறது.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான திரைப்படத் தொழிலாளர்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளனர்.

அஜித்தின் தோற்றம், வசனங்கள், படப்பிடிப்புத்தளம் தொடர்பான புகைப்படங்கள் என எந்தத் தகவலும் வெளியாகாதபடி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர் சுனில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மற்றொரு வில்லன் பாத்திரத்துக்கு விஜய் சேதுபதியை அணுகியுள்ளனராம்.

ஒருவேளை அவரால் நடிக்கத் தேதி ஒதுக்க முடியாவிட்டால் எஸ்.ஜே.சூர்யாவை ஒப்பந்தம் செய்யும் முடிவில் உள்ளனராம்.

குறிப்புச் சொற்கள்