பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்: கங்கை அமரன்

பேசுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்: கங்கை அமரன்

1 mins read
354ed249-dc62-487e-81f6-2fbb6f03d2d5
கங்கை அமரன், வைரமுத்து, இளையராஜா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இசையமைப்பாளர் இளையராஜா குறித்து பேசுவதை கவிஞர் வைரமுத்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

இளையராஜா இல்லை என்றால் இன்றைக்கு வைரமுத்துவே இல்லை என்று தாம் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வைரமுத்து எழுதிய ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலை இளையராஜா தான் இசையமைத்த படத்தில் பயன்படுத்தாவிட்டால் வைரமுத்து குறித்து யாருக்குமே தெரிந்திருக்காது.

“எந்த மனிதனாக இருந்தாலும் தாம் கடந்து வந்த பாதை குறித்து நினைத்துப் பார்க்க வேண்டும்.

“பாரதிராஜா இல்லை என்றால் இளையராஜாவும் அவரது தம்பியான நானும் இல்லை. அதேபோல் இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து இல்லை.

“இனி இளையராஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வைரமுத்து பேசினால் நான் பதிலளிப்பேன்,” என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்