விஜய் 70: இயக்குநர் வினோத், இரு நாயகிகள் ஒப்பந்தம்

1 mins read
1cf1a33f-4831-4525-8dee-28f4ac6018bf
ஹெச்.வினோத், விஜய். - படங்கள்: ஊடகம்

நடிப்புக்கு முழுக்கு போடுவது எனத் தீர்மானித்துள்ளார் விஜய்.

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘கோட்’ படத்தில் நடித்து வரும் அவர், தமது கடைசி படத்தை இயக்கும் பொறுப்பை யாரிடம் அளிக்கப் போகிறார் என்பதை அறிய ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகமும் ஆர்வத்துடன் காத்திருக்கிறது.

இந்நிலையில், ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளார் என்றும் அதற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்ல, அந்தப் படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது.

“இதற்கு முன்பு விஜய்யுடன் ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்த சமந்தாவும் ‘பைரவா’, ‘சர்க்கார்’ போன்ற படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷும் மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பதாக தமிழ் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்