நயன்தாரா கடிகாரம், கீர்த்தி சேலை குறித்து புலம்பிய ரசிகர்கள்

நயன்தாரா கடிகாரம், கீர்த்தி சேலை குறித்து புலம்பிய ரசிகர்கள்

2 mins read
2aa54189-bdb2-43b5-a95a-a217d8ff85ff
கீர்த்தி சுரேஷ். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அணிந்திருந்த கடிகாரத்தில் ஒரு நியாயம் உள்ளது. ஆனால், கீர்த்தி சுரேஷ் அணிந்துள்ள புடவையில் ஒரு நியாயம் இல்லை என ரசிகர்கள் புலம்பியுள்ளனர்.

இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்தில் கலந்துகொண்டார் கீர்த்தி சுரேஷ். நகை அணியாமல் வித்தியாசமாக ஜாக்கெட் அணிந்து, ‘டிசைனர்’ சேலையில் அழகாக வந்திருந்தார்.

அவர் அணிந்திருந்த சேலையின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 99 ஆயிரத்து 900 மட்டுமே. அதாவது ஏறக்குறைய ரூ.3 லட்சம்.

சேலையின் மதிப்பு தெரிந்தவர்களோ “அடேங்கப்பா! ஒருநாள் நிகழ்வுக்காக ரூ.3 லட்சத்தில் சேலை வாங்கியிருக்கிறாரே கீர்த்தி சுரேஷ். மணமகள் ஐஸ்வர்யாவின் சேலைகூட இந்த அளவுக்கு விலை அதிகமாகத் தெரியவில்லையே,” என வியந்தனர்.

ஆனால், இதே திருமணத்திற்கு மிகவும் எளிமையாக சேலை அணிந்து கையில் ரூ. 5.5 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்தைக் கட்டி வந்திருந்தார் நயன்தாரா. இந்நிலையில், “நயன்தாராவாவது அவரது கடிகாரத்தை அடிக்கடி அணியலாம். அதனால் ரூ. 5.5 லட்சம் செலவு செய்தது நியாயம். ஆனால் கீர்த்தி சுரேஷ் இந்தச் சேலையை அடிக்கடி உடுத்த மாட்டார்.

“சொல்லப்போனால் மீண்டும் அதே சேலையில் வேறு நிகழ்ச்சிக்குப் போகமாட்டார். அப்படி இருக்கும்போது ஒரு சேலையில் ரூ. 3 லட்சத்தை செலவிட்டது நியாயம் இல்லையே,” எனக் கூறியுள்ளனர். ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை மேனகா மற்றும் மலையாளத் தயாரிப்பாளர் சுரேஷின் மகள் ஆவார். தற்போது, ‘பேபி ஜான்’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

குறிப்புச் சொற்கள்