‘ஆவேஷம்’ வசூலில் சாதனை

‘ஆவேஷம்’ வசூலில் சாதனை

1 mins read
daa62535-13b1-41df-9abf-b128a32474e3
‘ஆவேஷம்’ படத்தில் பஹத் பாசில். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தொடர்ந்து வசூலைக் குவித்து வரும் மலையாளப் பட வரிசையில் தற்பொழுது ‘ஆவேஷம்’ படமும் இணைந்துள்ளது.

ஜித்து மாதவன் இயக்கத்தில் பஹத் பாசில் நடித்த படம் ‘ஆவேஷம்’. கடந்த வாரம் வெளியான இப்படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

பெங்களூரு தாதாவாக பஹத் பாசில் அசத்தியுள்ள இப்படத்தில், மிதுன் ஜெய்சங்கர், ஹிப்ஸ்டர், ரோஷன் ஷானவாஸ் ஆகியோர் புதுமுகங்களாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் பஹத் பாசிலின் ‘ஆவேஷம்’ திரைப்படத்தின் முதல் 5 நாள்கள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் 5 நாள்களில் ரூ.50 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் ஜித்து மாதவனின் ‘ரோமன்சம்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது படமாக ‘ஆவேஷம்’ படமும் ரூ. 50 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த ஆண்டு வெளியான ‘மஞ்சுமல் பாய்ஸ்’, ‘பிரமயுகம்’, ‘பிரேமலு’, ‘ஆடுஜீவிதம்’ ஆகிய மலையாளப் படங்களைத் தொடர்ந்து, ‘ஆவேஷம்’ படமும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்