தேர்தல் முடிந்தவுடன் ‘ராயன்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு: தனுஷ்

தேர்தல் முடிந்தவுடன் ‘ராயன்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு: தனுஷ்

1 mins read
79e3a5a4-27c9-4581-bdc5-53d9b597f125
‘ராயன்’ பட சுவரொட்டியில் தனுஷ், சந்திப் கிஷான், காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் ஆகியோர் உள்ளனர். - படம்: எக்ஸ் தளம்
Google News Preferred Icon

நடிகர் தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.

வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள தமிழகத் தேர்தல் முடிந்தவுடன் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி தனுஷ் தனது ‘ராயன்’ படத்தின் புதிய சுவரொட்டியை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, முதல் பாடல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவித்து தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளையும் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

சுவரொட்டியில் தனுஷ், சந்திப் கிஷான், காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்