உடல்நிலைத் தேறிவரும் சாயாஜி ஷிண்டே

உடல்நிலைத் தேறிவரும் சாயாஜி ஷிண்டே

1 mins read
e6cf67a5-fc86-425b-b678-d1b0fd2289d7
சாயாஜி ஷிண்டே. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தமிழில் பாரதியார் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான ‘பாரதி’, தூள் படங்களில் நடித்து மக்கள் மனதில் பிரபலமானவர் சாயாஜி ஷிண்டே.

சில நாள்களுக்கு முன்பு சாயாஜிக்கு மார்பில் வலி இருந்ததாகவும் அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

இந்நிலையில் சாயாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருந்தது பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டது. அதன்பின்னர் அவருக்கு அறுவைசிகிச்சை செய்து அடைப்பு நீக்கப்பட்டது.

தற்போது சாயாஜியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமது உடல்நிலை நன்றாக இருப்பதாக சாயாஜியும் சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்