பிரபலங்கள் கலந்துகொண்ட அருண் விஜய்யின் படம்

பிரபலங்கள் கலந்துகொண்ட அருண் விஜய்யின் படம்

1 mins read
51fced0a-9cf7-4131-a0bd-ba629c1df291
அருண் விஜய்யுடன் நடிக்கும் நடிகைகள். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

அருண் விஜய் நடிக்க இருக்கும் அவரது 36வது படத்தின் துவக்கவிழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிக்கும் இப்படத்தை, ‘மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் துவக்கவிழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதுடன் கிளாப் அடித்து படத்தினை துவக்கி வைத்தார்.

தமிழ் திரையுலகம் இதுவரை கண்டிராத பிரம்மாண்ட அதிரடி சண்டைக் காட்சிகளுடன் பரபரப்பான ஆக்சன் திரில்லர் படமாக இப்படம் உருவாகவுள்ளது.

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடிக்கிறார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தினை பிடிஜி யுனிவர்ஸ் நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி