‘ரத்னம்’ படத்தின் வெற்றிக்கு காத்திருக்கும் நடிகை

‘ரத்னம்’ படத்தின் வெற்றிக்கு காத்திருக்கும் நடிகை

1 mins read
aaf967ca-7e39-4dd1-bcfd-0b1b6cd091c2
பிரியா பவானி சங்கர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

‘ரத்னம்’ படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

ஊடகத்துறையிலிருந்து சினிமாவுக்குப்போன பிரியா பவானி சங்கரின் கையில், தற்பொழுது எட்டு படங்கள் இருக்கின்றன. வருமானத்துக்குக் குறைவில்லை என்று நிம்மதியாக இருக்கிறார்.

இருந்தாலும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வெற்றியாக ஒரு படம்கூட இல்லை என்று நினைக்கிறாராம் பிரியா. ‘இந்தியன் 2’ படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் அவர் படத்தில் வருகிற நேரம் குறைவுதானாம். அதனால் அந்தப் படத்தை நம்ப முடியாது.

இதற்கிடையில் இவர் விஷாலுடன் நடித்திருக்கும் படம் ‘ரத்னம்’. இந்தப் படம் தனக்குத் திருப்புமுனையாக அமையும் என்று காத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்