மீண்டும் திரையரங்குகளில் ‘கில்லி’

மீண்டும் திரையரங்குகளில் ‘கில்லி’

1 mins read
c2169162-498c-4987-af6e-100c8a5a04a5
‘கில்லி’ 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

தரணி இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி.

இத்திரைப்படம் தெலுங்கில் வெளியான ‘ஒக்கடு’ திரைப்படத்தின் மறுபதிப்பு ஆகும்.

‘கில்லி’ திரைப்படம் விஜய்யின் மிகப்பெரிய வெற்றிப் படம். மேலும் ரசிகர்களால் இன்று வரை வெகுவாக கொண்டாடப்படும் படங்களில் ஒன்றாக அது அமைந்துள்ளது.

2004ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியானது கில்லி திரைப்படம். இந்த ஆண்டோடு வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இதையொட்டி இப்படத்தை மீண்டும் மறுவெளியீடு செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கின்றனர்.

அண்மையில் பல படங்கள் மீண்டும் மறுவெளியீடப்பட்டு வருகிறது. மறுவெளியீட்டுப் படங்களை ரசிகர்களும் வரவேற்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்