எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் ஏ.ஆர்.ரஹ்மான்

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் ஏ.ஆர்.ரஹ்மான்

1 mins read
5366b047-b139-4342-bdcb-3daf7800b116
ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்ட பட பூஜை. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

தெலுங்குத் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் அறியப்பட்ட ஒரு நடிகராக இருப்பவர் ராம் சரண். ‘ஆர்ஆர்ஆர்’ படம் மூலம் ஆஸ்கர் வரையிலும் புகழ் பெற்றவர்.

தற்பொழுது இயக்குநர் சங்கர் இயக்கத்தில், ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் இப்படம் எப்போது வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இப்படத்தை அடுத்து ராம் சரண் நடிக்க உள்ள அவரது 16வது படத்தின் பூஜை நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. ‘உப்பென்னா’ படத்தை இயக்கிய புச்சிபாபு சனா இப்படத்தை இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

நேற்று நடைபெற்ற பூஜையில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சுமார் எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

குறிப்புச் சொற்கள்