எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘கஜானா’ திரைப்படம்

1 mins read
e88d363a-23be-4007-acf0-176b682594f3
‘கஜானா’ படத்தில் நடிகை சாந்தினி. - படம்: ஊடகம்

‘கஜானா’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள திகில் படம் கோடம்பாக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இதில் வேதிகா, சாந்தினி, யோகி பாபு, இனிகோ பிரபாகரன், பிரதாப் போத்தன், வேலு பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

“இதை கற்பனையுடன் கூடிய திகில் படம் என்று சொல்லலாம். படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பை வெளியிட்டுள்ளோம்.

“அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,” என்கிறார் படத்தின் இயக்குநர் பிரபாதீஷ் சாம்ஸ்.

இப்படத்துக்கான கதையையும் இவர்தான் எழுதியுள்ளார்.

இளையர்கள் சிலர் குழுவாகச் சென்று ஒரு காட்டுப் பகுதியில் இருப்பதாக நம்பப்படும் புதையலைத் தேடுகிறார்கள். அந்தத் தேடலின் பின்னணியில் பல்வேறு மர்ம முடிச்சுகள் இருக்கும்.

வனவிலங்குகள், அடர்ந்த காட்டில் உள்ள பாம்புகள் ஆகியவற்றைக் கடந்து செல்லும் இளையர்களுக்கு என்ன நடந்தது என்பதுதான் கதை.

ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை மிரள வைக்கும் என்று சொல்லும் இயக்குநர், யோகி பாபு நடித்துள்ள பகுதியில் நகைச்சுவை சற்றுத் தூக்கலாக இருக்கும் என்கிறார்.

குறிப்புச் சொற்கள்