அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தும் விஷ்ணு விஷால்

அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தும் விஷ்ணு விஷால்

1 mins read
b0f2651e-76c7-4474-a2b4-0b578cb5527c
விஷ்ணு விஷால். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

’லால் சலாம்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

தற்போது அவர் தயாரித்து நடித்துள்ள ‘மோகன்தாஸ்’ என்ற படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘களவு’ படத்தை இயக்கிய முரளி கார்த்திக்தான் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதையடுத்து ‘முன்டாசுப்பட்டி’ ராம்குமார் இயக்கத்தில் மீண்டும் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இது முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகிறது. விஷ்ணு விஷாலின் தோற்றமும் நடிப்பும் இப்படத்தில் மாறுபட்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்