‘கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்’

‘கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்’

1 mins read
c78b2d37-8301-4238-af8a-5e5bc2209070
ஏ.ஆர்.ரகுமான். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, அதைக் கொண்டு மனிதர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்கிறார் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

“தற்போது நேரம் என்பது அதிகம் தேவைப்படுகிறது. இந்த நவீன தொழில்நுட்பத்தை இந்த நோக்கத்துடன் பயன்படுத்தலாம். பல்வேறு அம்சங்களில் நிலவும் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் வேலை களைப் பறிக்காமல் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதும் அவர்களை வளர்ப்பதும்தான் சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன்.

“யாருடைய வேலையும் போகக்கூடாது என்பதில் நாம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்,” என்று ரகுமான் மேலும் கூறியுள்ளார்.

“கலையில் கூட, நீங்கள் எதையாவது உருவாக்குகிறீர்கள் என்றால், அதற்கான பயணத்தை கற்பனை செய்வது இப்போது மிகவும் எளிதானது. நீங்கள் அதை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு செல்லலாம்,” என்று ரகுமான் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்