ரஜினியுடன் ‘செல்ஃபி’: நிக்கி உற்சாகம்

ரஜினியுடன் ‘செல்ஃபி’: நிக்கி உற்சாகம்

1 mins read
6351e648-1c8c-4871-93a5-89bf76ae4559
ரஜினியுடன் ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்ட நிக்கி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

ரஜினியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட ‘செல்ஃபி’ படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் நடிகை நிக்கி கல்ராணி.

நடிகர் ஆதியை திருமணம் செய்துகொண்டுள்ள இவர், மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நிக்கியும் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் பங்கேற்க சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் பயணம் செய்தபோது ரஜினியும் இருந்தாராம்.

விமானத்தில் அவர் இருப்பதைக் கண்டதும் உற்சாகமான நிக்கி, விமான பயணச் சீட்டிலேயே அவரது கையெழுத்தைக் கேட்டுப் பெற்றாராம்.

“என் வாழ்வில் இதுதான் மிகச் சிறந்த விமானப் பயணம். எப்போதுமே எனக்கு விருப்பமான நடிகர் அவர்தான்,” என்று சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார் நிக்கி.

இந்நிலையில் நிக்கியின் பதிவுக்கு பின்னூட்டமிட்டுள்ள அவரது கணவர் ஆதி, ரஜினியுடன் படம் எடுத்துக்கொள்ளும் அறிய வாய்ப்பை தாம் இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
நடிகைநடிகர்