நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரட்டை வேடங்களில் திரிஷா

1 mins read
92bd4bcc-4f0c-4d20-ad8c-1c06a9c778ea
திரிஷா. - படம்: ஊடகம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரட்டை வேடங்களில் நடிக்திறார் திரிஷா.

சிரஞ்சீவியுடன் இவர் ஜோடி சேர்ந்துள்ள ‘விஷ்வம்பரா’ படத்தில்தான் இரட்டை வேடங்களை ஏற்றுள்ளாராம்.

இந்தப் படம் திரிஷாவின் இரு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டே உருவாக்கப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே தமிழில் ‘மோகினி’ என்ற படத்தில் இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் திரிஷா.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வெற்றியை அடுத்து, ‘லியோ’ படத்தில் நடித்தார் திரிஷா.

தற்போது தமிழில் ‘விடாமுயற்சி, ‘தக் லைஃப்’, மலையாளத்தில் ‘ராம்’, ‘ஐடென்டிடி’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்