அன்பு மழையில் ஆர்யா- சாயிஷா

அன்பு மழையில் ஆர்யா- சாயிஷா

1 mins read
a4189175-6d11-4d03-be35-7bb62760efbc
ஆர்யா- சாயிஷா ஜோடி. - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon

தமிழில் ‘கடைக்குட்டி சிங்கம்,’ ‘கஜினிகாந்த்,’ ‘காப்பான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சாயிஷா தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 5ம் ஆண்டு திருமண நாளை வரவேற்கும் விதமாக சாயிஷா சமூக ஊடகத்தில், “ என் வாழ்வின் அன்பிற்கு திருமண நாள் நல்வாழ்த்துகள். உங்களுக்கு தெரிந்ததை விட நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பதிலுக்கு நடிகர் ஆர்யா “உன்னுடன் இருந்த இந்த ஐந்து ஆண்டுகள் அழகானவை; இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் என் அன்பே” என்று பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்