விஜய் மகன் இயக்கும் படத்தில் துல்கர் சல்மான்

1 mins read
4e691c3e-d93a-4971-8ea0-f3d19137201f
ஜேசன் சஞ்சய், துல்கர் சல்மான். - படம்: ஊடகம்

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் திரைப்பட இயக்கம் பற்றி படித்திருக்கிறார். சில ஆங்கில குறும்படங்களை இயக்கி வந்தார். இந்நிலையில் அவர் எழுதி இயக்கும் முதல் தமிழ் படம் குறித்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இதில் விஜய் சேதுபதி நடிக்கலாம் என கூறப்பட்டது. தற்பொழுது அந்தப் படத்தில் துல்கர் சல்மான் நாயனாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

சண்டை, காதல் கலந்த படமாக இது உருவாகிறது. இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். நாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. படம் தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்