‘கர்ணா’ படத்தில் ஜான்வி

‘கர்ணா’ படத்தில் ஜான்வி

1 mins read
78781a05-c032-4f91-9381-33cdf6bcadb9
ஜான்வி கபூர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இந்தியில் உருவாகும் ‘கர்ணா’ படத்தில் மகாபாரதக் கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் இந்தப் படத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், நடிப்பது உறுதியாகி உள்ளது.

முதற்கட்டமாக நடந்து முடிந்த ஒப்பனைச் சோதனை இயக்குநருக்கு மனநிறைவைத் தந்துள்ளதாம். பிப்ரவரி இறுதியில் ‘கர்ணா’ படம் குறித்த முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
நடிகை

தொடர்புடைய செய்திகள்