பவதாரிணி இசையமைத்த கடைசிப் பாடல்

1 mins read
8f24e6dc-cbbc-490b-b9f3-03a347f4a11f
பவதாரிணி. - படம்: ஊடகம்

இளையராஜாவின் மகள் பவதாரிணி இறப்பதற்கு முன்பு இசையமைத்த பாடலை அவரது சகோதரர் கார்த்திக் ராஜா பாடியுள்ளது தெரியவந்துள்ளது.

‘புயலில் ஒரு தோணி’ என்ற தலைப்பில் உருவான அப்படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். ஈசன் என்பவர் இயக்கி உள்ளார்.

“பெண்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது. பவதாரிணிதான் இசையமைக்க வேண்டும் என்பதை தொடக்கத்திலேயே முடிவு செய்துவிட்டோம்.

“படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களை இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜாவும் ஜி.வி.பிரகாஷும் பாடியுள்ளனர்.

இரு பாடல்களையும் பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ளார். ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷும் மானசியும் பாடியுள்ளனர்.

“பெண்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது. பவதாரிணி தான் இசையமைக்க வேண்டும் என்பதும் தொடக்கத்திலேயே முடிவு செய்துவிட்டோம்,” என்கிறார் இயக்குநர் வெங்கி.

குறிப்புச் சொற்கள்