மீண்டும் இணையும் பார்த்திபன்-வடிவேலு கூட்டணி

மீண்டும் இணையும் பார்த்திபன்-வடிவேலு கூட்டணி

1 mins read
1e9914c0-c3b8-4231-9593-41e24498230c
வடிவேலு, பார்த்திபன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

பார்த்திபன் மூலம் வடிவேலுக்கு உருவாகும் சிக்கல்கள்தான் இவர்களது நகைச்சுவைக் காட்சிகள். மீண்டும் நாங்கள் இணையலாம் என்று பதிவிட்டு இருக்கிறார் பார்த்திபன்.

பார்த்திபனும் வடிவேலுவும் ‘பாரதி கண்ணம்மா’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘உன்னருகே நானிருந்தால்’ போன்ற படங்களில் இணைந்து நடித்து இரட்டையர் நகைச்சுவைக் கூட்டணியை உருவாக்கினார்கள். இவர்கள் தற்பொழுது மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள்.

அண்மையில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட பார்த்திபன், வடிவேலுவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கலாமா என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம். விரைவில் எதிர்பார்க்கலாம்,” என்று மறைமுகமாக சொல்லி இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்