‘இசைஞானி பட்டத்துக்கு தகுதி உள்ளவனா எனத் தெரியாது’

‘இசைஞானி பட்டத்துக்கு தகுதி உள்ளவனா எனத் தெரியாது’

1 mins read
0cf7e76f-aa88-480e-82f4-80dd75bfbe1b
இளையராஜா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இசைஞானி என்ற பட்டத்தைப் பெறுவதற்கான தகுதி தமக்கு உள்ளதா என்பது கேள்விக்குறிதான் என்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சிறு வயதிலேயே தாம் கர்வத்தில் இருந்து விடுபட்டுவிட்டதாகக் குறிப்பிட்டார்.

“இசைஞானி என்று மக்கள் என்னை அழைப்பதற்கு நன்றி. ஆனால் நான் என்னை அப்படி நினைத்துக் கொள்வதில்லை. அதனால் எனக்கு ஒரு கர்வமும் கிடையாது.

“சிறு வயதில் என் அண்ணனுடன் கச்சேரிகளுக்குச் செல்லும்போது ஹார்மோனியம் வாசிப்பேன். மக்கள் கைதட்டுவார்கள். அதைக் கேட்கும்போது பெருமையாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி பெற்று நிறைய வாசித்தேன். கைதட்டலும் அதிகமாகி, கர்வமும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில், நல்ல மெட்டுகளை ரசித்துதான் மக்கள் கை தட்டுகிறார்கள் என்பதை உணர்ந்த பிறகு என் தலையில் இருந்த பாரமெல்லாம் இறங்கிப்போய்விட்டது.

“அதனால் எந்தப் புகழ் மொழியும் எந்தவிதமான பாராட்டுகளும் என்னை சிந்திக்க வைக்காது,” என்றார் இளையராஜா.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்