‘தங்கலான்’ வெளியீடு தாமதம்: இயக்குநர், தயாரிப்பாளர் மோதல்

1 mins read
4727930a-ded8-43f1-8b42-44c9ecd756a6
‘தங்கலான்’ படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி. - படம்: ஊடகம்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ பட வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளதாம்.

இப்படத்தில் கணினி தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி உள்ளனர்.

இந்தக் காட்சிகளை உருவாக்கும் பணியை நான்கைந்து நிறுவனங்களிடம் ஒப்படைக்கலாம் என கூறியுள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

ஆனால் ஒரே நிறுவனத்திடம் பணிகளை ஒப்படைத்தால்தான் சரிப்பட்டு வரும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாகத் தெரிகிறது. ஆனால் அந்தப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

இதனால்தான் பட வெளியீடு தள்ளிப் போய்விட்டது என்று இயக்குநர் தரப்பு கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்