காதலை ஒப்புக்கொண்ட ஸ்ரீதேவி மகள்

காதலை ஒப்புக்கொண்ட ஸ்ரீதேவி மகள்

1 mins read
ee154950-a89e-4f2f-b870-bf005473888b
ஜான்வி கபூர். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

காலஞ்சென்ற நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் காதல் வயப்பட்டிருப்பதை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் சுஷில் குமாரின் பேரன் ஷிகர் பஹாடியாவும் ஜான்வியும் காதலிப்பதாக இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் இருவரும் அது குறித்து வாய் திறக்கவில்லை.

இந்நிலையில், தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தன் காதல் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் ஜான்வி.

உடனடியாக யாருடனாவது பேச வேண்டும் என்று தோன்றினால் உங்கள் வட்டத்தில் உள்ள எந்த மூன்று பேரை தொடர்பு கொள்வீர்கள் என்று ஜான்வியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு தந்தை, தங்கை, ஷிக்கு (ஷிகர்) ஆகியோரை குறிப்பிட்டார் ஜான்வி. மேலும் தன் காதலருடன் ‘டேட்’ செய்வதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்