துல்கர் சல்மானின் இயக்கத்தில் பார்வதி

துல்கர் சல்மானின் இயக்கத்தில் பார்வதி

1 mins read
a9332d6d-ac0b-4e0c-9423-edddf4e3bd05
பார்வதி, துல்கர் சல்மான். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

துல்கர் சல்மான் தயாரிக்க இருக்கும் ஒரு படத்தில் பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் பார்வதி நடிக்க இருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘பெங்களூர் டேஸ்’ படத்தில் சல்மான், பார்வதி இருவரும் ஜோடியாக இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு ‘சார்லி’ என்ற படத்தில் இணைந்து நடித்த இவர்கள் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கின்றனர்.

ஆனால் இந்தப் படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவில்லை. அவர்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதில் கதாநாயகியாக பார்வதி நடிக்க இருக்கிறார்.

பார்வதி விரும்பவதுபோல பெண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் இது. ஆனால் இதுவரை பார்வதி ஏற்று நடித்திராத கிட்டத்தட்ட மலையாள சினிமாவிற்கே புதிதான பெண் ‘சூப்பர் ஹீரோ’ கதாபாத்திரத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது.

துல்கர் சல்மானுடன் ‘ஜி ஸ்டுடியோ’ நிறுவனம் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கிறது. அதே சமயம் இன்னும் படத்தின் இயக்குநர் மற்ற நடிகர்கள் குறித்த விபரம் எதுவும் தெரியவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி