கண்ணகி: இது நியாயம் கேட்கும் நான்கு பெண்களின் கதை

1 mins read
000b52fc-90a3-4101-af2a-21dd84c5cc86
‘கண்ணகி’ படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்்

அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஸோயா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘கண்ணகி’.

அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஷான் ரஹ்மான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

டிசம்பர் 15ஆம் தேதி இப்படம் வெளியீடு காண உள்ளது.

இது நான்கு பெண்களின் வெவ்வேறு பிரச்சினைகளைப் பேசும் படம் என்கிறார் இயக்குநர்.

இன்றைய காலகட்டத்தில் திருமணத்துக்கு முன்னும் பின்னும் நடக்கும் உளவியல், உறவுச் சிக்கல்களை அலசுமாம்.

“கண்ணகி என்ற தலைப்பு ஏன் என்று சிலர் கேட்கிறார்கள்.

நம் இலக்கியத்தில் கண்ணகிக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.

“ஒரு பெண் நேருக்கு நேர் நின்று நியாயம் கேட்கும் படைப்பு உலகில் வேறு எந்த மொழி இலக்கியத்திலாவது உள்ளதா என்று தெரியவில்லை. அதனால் எனக்கு கண்ணகியைப் பிடிக்கும்.

“நியாயம் கேட்கும் பெண்கள் தொடர்பான படம் என்பதால் இந்தத் தலைப்பை வைத்தேன். இந்தப் படம் கண்டிப்பாக மாறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும்,” என்கிறார் யஷ்வந்த் கிஷோர்.

குறிப்புச் சொற்கள்