மம்முட்டியின் படத்திற்கு அரபு நாடுகளில் தடை

1 mins read
4374c7fd-315b-401b-a155-e0bc538c42aa
‘காதல் தி கோர்’ படத்தில் ஜோதிகா, மம்முட்டி. - படம்: ஊடகம்

மம்முட்டி ஓரினச் சேர்க்கையாளராக நடித்திருக்கும் ஒரு படத்திற்கு அரபு நாடுகள் தடை விதித்திருக்கின்றன.

இந்தப் படத்தில் மம்முட்டி, ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திடீரென இவருடைய மனைவி ஜோதிகா விவாகரத்து கோருகிறார். மம்முட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வருவதைக் காரணமாக கூறுகிறார் ஜோதிகா.

இந்தக் குழப்பங்களிலிருந்து ஜார்ஜ் எப்படி மீள்கிறார் என்பதே காதல் - தி கோர் படத்தின் கதை.

ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதால் கத்தார், குவைத் மற்றும் அமீரக நாடுகளில் இப்படத்திற்குத் தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி