நட்பையும் கிரிக்கெட்டையும் மையப்படுத்தி உருவாகும் படம்

1 mins read
c74b1f36-647a-466f-bd7d-500e8df446e2
சச்சின், கௌதம் மேனன். - படங்கள்: ஊடகம்

கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி இடையேயான நெருக்கமான நட்பை மையப்படுத்தி திரைப்படம் இயக்கப் போவதாக இயக்குநர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் நேரடி வர்ணனையில் பங்கேற்ற அவர், கிரிக்கெட்டை வைத்து ஒரு கதையை எழுதி வருவதாகக் குறிப்பிட்டார்.

“இரண்டு நண்பர்கள் கிரிக்கெட் போட்டிகளில் மாவட்ட அளவில் திறமையை வெளிப்படுத்தி, மாநில அளவில் சாதிக்கிறார்கள். அவர்களால் எப்படிச் சாதிக்க முடிந்தது என்பதுதான் கதை. இதில் கிரிக்கெட், நட்பு இரண்டுக்கும் முக்கியத்துவம் இருக்கும்,” என்றார் கௌதம் மேனன்.

இந்திய அணி கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், இயக்குநர் கௌதம் மேனனின் இந்த அறிவிப்பு திரை ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் மூழ்க வைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்