ராஷி: பண்டிகை காலம் என்றாலே கொண்டாட்டம்தான்

ராஷி: பண்டிகை காலம் என்றாலே கொண்டாட்டம்தான்

1 mins read
c3d05b7b-ea5f-4e53-8f9b-e46176c49fe3
ராஷி கண்ணா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

பண்டிகைக் காலம் வந்துவிட்டாலே கொண்டாட்டம்தான் என்கிறார் ராஷி கண்ணா.

நவராத்திரி தொடங்கி ஆங்கிலப் புத்தாண்டு வரை மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும் என ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நவராத்திரியின்போது ஒன்பது நாளும் அம்மனை பூசை செய்து வழிபடுவேன். நவராத்திரி முடிந்ததும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவேன். எனக்கு தீபாவளிதான் பெரிய பண்டிகை.

“நவம்பர் 30ஆம் தேதி எனது பிறந்த நாள். அதைக் கொண்டாடும் ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கி விடுவேன். தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் எனத் தொடர்ந்து மூன்று மாதங்கள் பண்டிகைக் கொண்டாட்டங்களில் மூழ்கிப்போவேன்,” என்கிறார் ராஷி.

குறிப்புச் சொற்கள்