விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி

விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி

1 mins read
f50dde54-18d2-4ab0-a904-9c54da45718e
மீனாட்சி சௌத்ரி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

விஜய்யின் 68ஆவது படத்தில் கதாநாயகியாக நடிக்க மீனாட்சி சௌத்ரி ஒப்பந்தமாகி உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஏற்கெனவே இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மீனாட்சி சௌத்ரியும் இணைந்துள்ளளதாகக் கூறப்படுகிறது. இவர் பிரியங்கா மோகனுக்குப் பதிலாக நடிக்கிறாரா அல்லது படத்தில் இரண்டு நாயகிகளா என்பது உறுதியாகவில்லை.

தற்போது மகேஷ் பாபுவுடன் ‘குண்டூர் காரம்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் மீனாட்சி. சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவர், விஜய்யுடன் நடிப்பது குறித்து விரைவில் பதிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்