இசையமைப்பாளர் டி. இமான் தொடர்ந்து பல்வேறு சமூகச் சேவைகளைச் செய்து வருகிறார்.
கடலூர் மாவட்டம், மந்தாரக்குப்பம் பகுதியில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றன.
அவற்றுள் ஆறு குடிசைகள் முற்றிலும் சேதமடைந்து இருப்பதாக சமூக ஆர்வலர் செல்வம் உமா மூலம் தகவலறிந்த இசையமைப்பாளர் டி. இமான், இரண்டு லட்சம் ரூபாய் செலவில் அந்தக் குடிசைகளை சீரமைத்துக் கொடுத்துள்ளார்.
மேலும், மூன்று வீடுகளுக்கு புதிதாக தார்பாய்கள் வழங்கியதுடன் நரிக்குறவ மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் இரவு நேர பாடசாலையும் தொடங்கி வைத்து நோட்டுப் புத்தகங்களும் வழங்கியுள்ளார்.
தமது பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளை மூலமாக சமூகச் சேவையாற்றி வருவதாகவும் சாதி, மத, இன வேறுபாடு பார்க்காமல் செயல்பட்டு வருவதாகவும் இமான் தெரிவித்துள்ளார்.


