சோபிதா: முன்னேற வேண்டும் என மனதில் வெறி ஏற்பட்டது

சோபிதா: முன்னேற வேண்டும் என மனதில் வெறி ஏற்பட்டது

1 mins read
d51cd326-3500-4bd6-8849-263f4e92545e
சோபிதா துலிபாலா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

திரையுலகில் அனைத்தையும் சாதித்துவிட்டதாக நினைக்கவே முடியாது என்கிறார் நடிகை சோபிதா துலிபாலா.

சாதிக்க வேண்டிய அம்சங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கும் என்றும் அதற்கு முடிவே இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“என்னைப் பற்றிய வதந்திகளை கண்டுகொள்வதே இல்லை. சில வதந்திகள் தொடர்பாக ஏற்கெனவே விளக்கம் அளித்தேன். ஆனாலும்கூட மீண்டும் மீண்டும் அவற்றைப் பரப்புகிறார்கள்.

“சிறு வயதில் நான் படித்த பள்ளியின் விளையாட்டுப் பிரிவுக்கு தலைவனாக இருந்த மாணவன்மீது எனக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. அதை அவனிடம் சொல்ல முயன்றேன். ஆனால் முடியவில்லை.

“அந்த மாணவனும் என்னைக் கண்டுகொள்ளவே இல்லை. இத்தனைக்கும் பள்ளியில் நான்தான் முதல் மாணவியாக இருந்தேன்,” என்கிறார் சோபிதா துலிபாலா.

அந்த மாணவனின் செய்கையால் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறி ஏற்பட்டதாகவும் இதற்காக அம்மாணவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.

குறிப்புச் சொற்கள்