வேட்டி, சட்டையுடன் திருப்பதியில் வழிபட்ட ஷாருக்கான்

வேட்டி, சட்டையுடன் திருப்பதியில் வழிபட்ட ஷாருக்கான்

1 mins read
73eb38d0-188b-4f45-bf93-fa871f4c41eb
மகள் சுஹானா கானுடன் ஷாருக்கான் - படம்: இந்திய ஊடகம்
Google News Preferred Icon
கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா
கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா -
குடும்பத்தினர், படக்குழுவினருடன் ஷாருக்கான்.
குடும்பத்தினர், படக்குழுவினருடன் ஷாருக்கான். - படம்: இந்திய ஊடகம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குடும்பத்தினர், ஜவான் படக் குழுவினரோடு திருப்பதிக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர்.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஜவான்’ செப்டம்பர் 7ஆம் தேதி வெளியீடு காண்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

‘ஜவான்’ பெரும் வெற்றியடைய ஆசி வேண்டி ஷாருக்கான், கதாநாயகி நயன்தாரா உள்ளிட்டோர் செவ்வாய் இரவு திருப்பதி சென்றுள்ளனர். அங்கு இரவு தங்கிய அவர்கள் அதிகாலை கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டுள்ளனர்.

முதன்முறையாக திருப்பதி சென்ற நடிகர் ஷாருக்கான் வேட்டி, சட்டை, துண்டு அணிந்து ஏழுமலையான் கோவிலில் கொடிமரம் துவங்கி மூலவர் வரை எதையும் தவிர்க்காமல் கும்பிட்டு பக்தியை வெளிப்படுத்தினார்

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்