வெற்றிமாறன், சூர்யா கூட்டணியில் முழுவீச்சில் உருவாகப்போகும் ‘வாடிவாசல்’

1 mins read
07d51ade-149e-4d68-a9ac-0689b489ff37
‘வாடிவாசல்’ படப்பிடிப்பில் சூர்யா, வெற்றிமாறன். - படம்: ஊடகம்

ஒருவழியாக ‘வாடிவாசல்’ படத்துக்கான பணிகளை மீண்டும் தொடங்கி உள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். படத்தில் ‘கிராஃபிக்ஸ்’ தொழில்நுட்ப உதவியோடு நிறைய காட்சிகளை உருவாக்க வேண்டியுள்ளதாம்.

இதற்காக அடிக்கடி லண்டன் பறந்து செல்கிறார். அங்குள்ள முன்னணி தொழில்நுட்ப நிறுவனம்தான் இந்தக் காட்சிகளை உருவாக்கும் பணியில் உதவ உள்ளது.

‘விடுதலை 2’ படத்தை முடித்துள்ளார் வெற்றிமாறன். அதனால் ‘வாடிவாசல்’ படத்தை முழுவீச்சில் எடுத்து முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தை முடித்த கையோடு இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் திரைக்கதையை அமைக்க சுதாவுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், அவருக்கு ஒதுக்கிய தேதிகளை வெற்றிமாறனுக்குக் கொடுத்துள்ளார் சூர்யா.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகிறது ‘வாடிவாசல்’. அறிவிப்பு வெளியான நாள்முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது இப்படம்.

முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வெற்றிமாறன் வேறு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். அதனால் படம் முடங்கிப்போனது.

இந்நிலையில், விரைவில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்