விஜய்க்கு ஜோடியாகும் சினேகா!

விஜய்க்கு ஜோடியாகும் சினேகா!

1 mins read
3d173e6f-2070-478f-b984-f349f64528a5
சினேகா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

விஜய்யின் புதுப் படத்தில் நடிகை சினேகா அவரது ஜோடியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று குறிப்பிடுகின்றனர்.

இந்தப் படத்திற்கான முதற்கட்ட தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

இந்தப் படத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் இதனால் மூன்று கதாநாயகிகளை ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகைகள் ஜோதிகாவும் பிரியங்கா மோகனும் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஜோதிகா இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து, சிம்ரனுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்பட்ட நிலையில், சினேகாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘வசீகரா’ படத்தில் விஜய்யும் சினேகாவும் இணைந்து நடித்திருந்தனர்.

குறிப்புச் சொற்கள்