புதுப்படம் இயக்கும் அர்ஜுன்

புதுப்படம் இயக்கும் அர்ஜுன்

1 mins read
1755736d-9e91-425d-85ba-da104236ee38
மனைவி, மகள்களுடன் அர்ஜுன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

விஜய்யின் ‘லியோ’ படத்தை முடித்த கையோடு அடுத்த பணியில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் நடிகர் அர்ஜுன்.

தன் மகள் ஐஸ்வர்யா கதா நாயகியாக நடிக்கும் படத்தை இவர் இயக்கப் போவதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. அந்தப் படத்துக்கான வேலைகளைத்தான் இப்போது தொடங்கி உள்ளாராம்.

அர்ஜுன் இயக்கும் இப்படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சன்தான் நாயகன். அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற படமாக உருவாகிறது என்பதால் சத்யராஜ், ஜெயராம், பிரகாஷ்ராஜ் ஆகியோருடன் அர்ஜுனும் இணைந்து நடிக்கிறார்.

இதற்கிடையே தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ்கிறார் அர்ஜுன்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்